நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி அறிவிப்பு!

Tuesday, January 14th, 2020


டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி திருத்தத்தின் நன்மைகளை இதுவரை நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரச சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அவ்வாறான பல நிறுவனங்களின் பிரதானிகளை அதிகாரசபைக்கு அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெட் வரி குறைக்கப்பட்டமை மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் வரியை இரத்து செய்தமையின் நன்மைகள் தமக்கு கிடைக்கவில்லை என குறித்த நிறுவனங்களின் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

Related posts:


தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சி - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் - உலக வங்கியின் பணிப்பா...
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை - அமைச்சர் பந்துல குணவர்...