தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்ற 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

Wednesday, September 4th, 2019


தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

19 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts:

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி - பரீட்சைகள் திணைக்...
ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம்ம...
அடுத்த வாரம்முதல் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள் - கல்வி அமைச்சு தீர்மா...