தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Monday, January 6th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பரந்தளவிலான தேசிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பிரதி செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே உருவாக்கப்படவுள்ள தேசிய அமைப்பின் மூலம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டுச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது!
கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுங்கள் - பொன்.சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம்!
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பிரதி பொலிஸ்மா ...
|
|
|


