ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, October 15th, 2019
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(14) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பொருத்து வீடுகளையாவது பெற்றுத்தாருங்கள்: ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட பகுதி மக்கள் கோரிக்கை!
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பெப்ரவரி 10இற்கு பின் நிதியமைச்சில் மாற்றம்?
|
|
|


