சர்ச்சையை ஏற்படுத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை!
Sunday, September 22nd, 2019
மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேரா கோரிக்கை விடுக்கவுள்ளார்.
பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கையை சட்டமா அதிபர் விடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.தில்ருக்ஸி டயஸ், எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவன பணிப்பாளர் சேனாதிபதியுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் பேஸ்புக்கின் ஊடாக வெளியானதன் பின்னர் தில்ருக்ஸி பதவிவிலகிவிடுவார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்த்தது. எனினும் அது நடக்காத சந்தர்ப்பத்திலேயே சட்டமா அதிபர் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
தனியார் மருந்தகம் சீல் வைப்பு!
கல்வி கற்கும் ஆண்டுகளை குறைப்பது ஓர் யோசனை மட்டுமே - கல்வி அமைச்சர்
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்களுடன் அரசிதழ் இன்று!
|
|
|


