கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் – பிரபல ஜோதிடர் ஆரூடம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
கோத்தபாய தோல்வி அடைவார் என கூறும் எவரும் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திக்க தொட்டவத்த சவால் விடுத்துள்ளார். காணொளி மூலம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உரிய முறையில் வெற்றி பெறுவார். அப்படி இல்லை என்று கூறும் யாராக இருந்தாலும், அவர்களிடம் எனது கருத்தை உறுதிப்படுத்த முடியும்.
யோக பலம், ஜோதிடம் அல்லது எந்தவொரு முறையிலும் கோத்தபாய வெற்றி பெறுவார் என்பதனை உறுதி செய்ய என்னால் முடியும்” என ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!
அமைச்சர்களான பந்துல, பிரசன்ன உள்ளிட்ட பலர் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வாக்குமூலம்!
மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்தியா 600 மில்லியன் நிதி உதவி!
|
|