குளியாப்பிட்டியில் இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரி !

Sunday, September 1st, 2019


நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இது ஆரம்பிக்கப்படவுள்ளது. குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் அதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வியில் நவீன மய நடவடிக்கையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதன்மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும். அத்துடன் நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டதாகவும் மூன்றாவது பல்கலைக்கழகம் விரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

Related posts: