கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை !

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளைமுதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண சேவை 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 15000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது சாதாரண சேவை 3000 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 10000 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!
எதிர்வரும் 21ஆம் திகதி சூரியக்கிரகணம்!
இலங்கை கல்வி முறையில் பாரிய மாற்றம்; இன்றுமுதல் கல்வி நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் நடவடிக்கை - த...
|
|