ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு !
Saturday, January 11th, 2020
2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு, காவல்துறை விசேட விசாரணை பிரிவு என்பனவற்றின் செயற்பாடுகளினால் இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் குறித்து ஆராய்வதற்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தயா சந்தசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறைமா அதிபர்; சந்ரா பெர்னாண்டோ ஆகியோர் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைற, அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், படையினர் மற்றும் காவல்துறை சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த ஆணைக்குழுவில் அறிக்கையிட முடியும்.
அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கை ஆறு மாத காலப்பகுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


