இளைப்பாறிய ரயில்வே பணியாளர்கள் சேவையில்?
 Sunday, September 29th, 2019
        
                    Sunday, September 29th, 2019
            
இளைப்பாறிய இயந்திர சாரதிகளை கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும்போது சேவையாற்றுவதற்காக ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் இளைப்பாறிய ரயில்வே இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே நிலைய அதிபர்கள், சமிஞ்சை கண்காணிப்பாளர்கள், ரயில்வே ஓடுபாதை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இது தோல்விக்காணுமாக இருந்தால் திங்கட்கிழமைமுதல் இளைப்பாறிய ரயில்வே பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        