இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியுடன் திட்டம்!

குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
சீனாவின் நிதியுதவியுடன், குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்காக இரண்டாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொரட்டுவ, பேலியகொட, திம்பிரிகஸ்ஸாய, மாரகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பேலியகொட மற்றும் மாரகம் மாநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணியில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திம்பிரிகசாய பிரதேச செயலாளர் பிரிவில் தெமட்ட கொட கலாநிதி டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள 1 ரூட் 3.77 பேர்ச் அரசாங்கத்தின் காணியை அரச காணி கட்டளைச்சட்டத்தின் கீழ் நன்கொடையாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்காகவும், மொரட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் பெட்டரிவத்தை தெலவல மாவத்தையில் உள்ள 3 ஏக்கர் 3 ரூட் 8.84 பேர்ச் காணியை பெற்றுக் கொள்வதற்கும், இந்த காணிகளை அபிவிருத்தி செய்ய தேவையான நிதியை பெற்றுக் கொள்ளவும் மாநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
|
|