அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!
Monday, December 9th, 2019
அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் தலைமையாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.இதேவேளை இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து இராணுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு - யாழில் போராட்டம் !
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தாதியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு!
காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் - இடியுடன் கூடிய பலத்த மழை வளி...
|
|
|
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இவ் அமைச்சுக் கிடைத்தது பாதிக்கப...
புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு - கிளிநொச்சி மாவட்ட அரசா...
பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்...


