ஹெம்பிலி மீன் வலைக்கு தடை!

Sunday, October 30th, 2016

ஹெம்பிலி எனப்படும் மீன் வலையை தடை செய்வதற்கான பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும்  கடற்றொழில் பிரதிநிதிகளுக்குமிடையில் சமிபத்தில் நடைபெற்ற  கலந்துரையாடலின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. சுருக்கு, லைலா, ஹெம்பலி போன்ற வலைகளின் பயன்பாட்டினால் கற்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் அமைதியற்ற நிலை தோன்றியது.

இவ்வாறான வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் கடல் வளம் பாரியளவில் அழிவுக்கு உள்ளாவதாக பிரதிநிதிகள் இதன் போது சுட்டிக்காட்டினார்கள். இவ்வாறான வலைகளில் டூனா மீன் சிக்குவதாகவும் இதனைத் தடுப்பதற்காக மீனவர்கள் டைனமைற் வெடிப்பொருளைப்; பயன்படுத்துவதாகவும் பிரதிநிதிகள குறிப்பிட்டனர்.

இதனால், டொல்பின், போன்ற மீன் இனங்களும் முருகைக் கற்பாறைகளும் அழிவுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். கற்பிட்டி கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் பற்றி பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது. இதன் போது டைனமைற் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

4c0f082a3d29318f6deec8cd550ef1d6_XL

Related posts: