ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை – பிரதமர்!
Thursday, April 6th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து இறுதி இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். துறைமுகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக உத்தேச உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகம் காரணமாக அரசாங்கம் பாரியளவில் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த நட்டத்தை ஈடு செய்ய வேண்டியது அவசியமானது எனவும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!
அமைச்சர் ரணதுங்க யாழ்ப்பாணம் விஜயம்!
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் -நுகர்வோர் அதிகார சபை!
|
|
|


