ஹத்துரு சிங்காவை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிக்க முடிவு – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
Thursday, July 25th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. அரையிறுதிக்கு கூட இலங்கை அணி தகுதி பெறவில்லை.
இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, விளையாட்டுதுறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட ஏனைய பயிற்சியாளர்கள் குழுவை அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
போட்டிக்கு ஓடும் பஸ் சாரதிகளை கைது செய்ய உத்தரவு!
இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரிப்பு!
நாட்டில் டயர்களுக்கு தட்டுப்பாடு – இறக்குமதி தடையே காரணம் என தகவல்!
|
|
|


