வொல்பச்சியா பக்டீரியாக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை!

Tuesday, March 3rd, 2020

டெங்கு நோயை கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்களை உடைய கொசுக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த நடை முறை திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இந்த பரீட்சாரத்த முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் இன்னும் மட்டக்குளி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னர் மற்றைய இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தில் பங்குபற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைவதாக இந்த திட்டத்தின் போது உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொல்பி தெரிவித்துள்ளார்.

வொல் பச்சியாமுறை 2011 இல் அவுஸ்திரேலியாவின் கெயார்ன்ஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் முறை பெரும் வெற்றியளித்துள்ளது. அதன் பின் இங்கு டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க குறிப்பிடுகையில் 1980 களில் இருந்து டெங்கு நோய் இலங்கையில் தீவிரமாக பரவி வருவதாகவும் , ஒவ்வொரு ஆண்டும் டெங்கு நோயின் வீரியம் அதிகரித்து வருவதாகவும், எனினும் மரண விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: