வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு தாதியர் சங்கம் குற்றச்சாட்டு!
Wednesday, January 18th, 2017
நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்திசாலைகளில் பெரும்பாலான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக ஜக்கிய இலங்கைத் தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமார சிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஏராளமான நோயளிகள் மருந்துகளை வெளியில் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கான பொருளாதார வசதிகள் இல்லதவர்கள் பெரிதும் திண்டாடுவதாகவும் சங்கத்தின் தலைவர் காமினி குமார சிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்களின் தட்டுப்பாடும் இருப்பதால் சிறப்பாகக் கண் சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சை போன்றவற்றுக்கும் தேவையான உபகரணங்களையும் வெளியில் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும், தான் எந்த வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் – சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் கூறினார்.

Related posts:
|
|
|


