வேட்புமனுக்களை மீள் பரிசோதிக்கும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Monday, December 25th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் பரிசோதிக்கும் பணிகள் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பெறப்பட்டு இந்த பரிசீலனை இடம்பெற்று வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் உதவி தேர்தல் ஆணையாளர்களினால் தேர்தல்கள் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் எட்டு மாவட்டங்களின் உறுதிப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களின் பிரதிகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் எடுத்து வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றும் நாளையும் பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் வாக்காளர் பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
சூரிய சக்தி மின்திட்டத்திற்கு மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் முதலிட ஆர்வம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
மாணவி வித்தியா கூட்டுப் பலாத்காரம் - படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை கைதி கண்டி தேசிய வைத்தியசால...
|
|
|


