வேகக் கட்டுப்பாட்டை இழந்து  மரத்துடன் மோதுண்ட ஹயஸ் வான்: மூன்று இளைஞர்கள் படுகாயம்!

Monday, July 25th, 2016

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை(25) காலை- 07 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் படு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின்  அதி சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வான் சாரதி  நித்திரைக் கலக்கத்துடன் வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமாக உள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

10226a09-32fd-4789-8049-ded55bc5ec28

Related posts: