வெள்ளவத்தையில் கடும் மோதல் – பொலிஸார் உட்பட பலர் காயம்!
Monday, August 5th, 2019
நேற்றிரவு வெள்ளவத்தையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மோதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை மயூரா வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் நேற்றிரவு மோதல் சம்பவம் ஏற்பட்டது. கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கடும் மோதலாக மாறியிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் - விவசாயத் திணைக்களம் வழங்கியது!
மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்
வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
|
|
|


