வெளிநாட்டில் பிள்ளைகள் : தாயின் விபரீத முடிவு !

Thursday, May 24th, 2018

உரும்பிராய் வடக்குப் பகுதியில் வயோதிபத் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயோதிபத் தாயின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுப் பிற்பகல் அவரது உறவினரொருவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரைக்  காணவில்லை. பின்னர் வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு சடலமாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: