வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் !

இலங்கையில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டவர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் துரதிஷ்டவசமாககண்டியில் வன்முறை சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
எனினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வெளிநாட்டவர்கள்வருகைத்தர முடியும்.
மேலும் கண்டி சம்பவத்தினால் சுற்றுலா துறையினுள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனினும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.இனியும் ஏற்படாது எனவும், நாடு பாதுகாப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பில்!
பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள் – இல்லையேல் மீண்டும் ஆபத்து என தொற்று நோய் பிரிவு கடும் ...
மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற...
|
|