வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி – ஜனவரிமுதல் நடைமுறை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

Sunday, November 21st, 2021

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காப்புறுதி தொகைக்காக தொழிலாளர்களை அழைக்கும் முதலாளிகள் பணம் செலுத்த வேண்டும் என சட்டங்கள் கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பணியாளர்கள் திடீர் சுகவீனமடைந்தால் அல்லது பாதிக்கப்பட்டால் குறித்த காப்புறுதி ஊடாக பணம் செலுத்தப்பட வேண்டும். முகவர் நிறுவனங்கள் 5000 டொலர் பெற்றுக் கொண்டு பணியாளர்களை ஏமாற்றி வருகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் இவ்வாறு ஏமாற்று நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: