வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தால் பாடசாலைகள் செயற்படுகின்றன – இலவசக் கல்வியும் பாதுகாக்கப்பட்டுள்ளது -அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு!
Thursday, January 6th, 2022
தடுப்பூசி திட்டத்தின் வெற்றி மற்றும் திறமையான இலவச சுகாதார சேவையால், கொவிட்-19 தொற்று நோயின் போதும் நாட்டிலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் இலவசக் கல்வி பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமையால் நாட்டில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர்கள் குறிப்பாக சமூக சுகாதார முன்முயற்சிகளின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் இதன்போது அவர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகளுக்கு 2 மாத கடூழியச் சிறை: ஒரு வருட சாரதியத்தடை!
டிஜிற்றல் மயப்படுத்தப்படுகின்றது பரீட்சைகள் திணைக்களம் !
தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!
|
|
|


