வெப்பம் தொடர்ந்தும் நீடிக்கும் – காலநிலை அவதான நிலையம்!

Monday, April 15th, 2019

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மே மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் ஏற்படும் பருவப்பெயர்ச்சி காலநிலையின் பின்னரே இந்த வெப்பமான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புபெறும் வழிமுறைகளைக் கையாள வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: