வெப்பநிலை அதிகரிக்கும்: யாழ்.மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!
 Wednesday, April 12th, 2017
        
                    Wednesday, April 12th, 2017
            
யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 15ம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தினம் தொடக்கம் பிற்பகல் 2.00 மணிக்கு பின் ஒடுங்கல் மழைக்கான சாத்தியமும் உள்ளது எனக் கூறியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் அதிகரித்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும்நிலையிலேயே யாழ்.வானிலை அவதான நிலையம் மேற்படி தகவலை கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில்,
இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் படிப்படியாக நகர்ந்து நாட்டின் மேற்பகுதியை வந்தடைய உள்ளது.அதாவது யாழ்ப்பாணத்தை வந்தடைய உள்ளது. இதன்படி 15ம் திகதியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 15ம் திகதிக்கு பின்னதாக யாழ்.மாவட்டத்தி ல்வெப்பம் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
இதன்படி தற்போது35 பாகை செல்சியஸ் ஆக உள்ள வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகைசெல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.இதேபோல் நேற்றுதொடக்கம் மாலை 2 மணிக்கு பின்னர் ஒடுங்கல் மழை பெய்வதற்கான வாய்ப்புக்களும்உள்ள நிலையில், சில சமயங்களில் வெப்ப நிலை குறைவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளது. எனினும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        