வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க இந்தியா தீர்மானம் – வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, August 20th, 2023

வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் சராசரி மொத்த விற்பனை விலை ஜூலை முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடன் அமுலாகும் வகையில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வரியை விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் இந்தியாவிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளை பாதிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நாட்டில் மேற்கொள்ளப்படும் வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் பெரியவெங்காய பயிர் செய்கை கைவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் பெரிய வெங்காயத்துக்கான தேவை ஆண்டொன்றுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இந்த தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டில் நான்காயிரத்து 716 மெட்ரிக் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வருடத்தில் 31 ஆயிரத்து 795 மெற்றிக் டன் பெரியவெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: