வீர வணக்கம்!
Saturday, July 20th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” காலமானார். அவருக்கு எமது வீர வணக்கங்களை செலுத்துகின்றோம்
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழ் ஈழ இராணுவம் “தம்பா” எனும் இயக்கம் கட்டியமைத்து அதற்கு தலைமையேற்று ஈழ விடுதலைப் போரில் தனது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை வழங்கிய தோழர் மகேஸ்வரன் அவர்கள் ஈழப் போராட்ட வரலாற்றில் மறுக்கமுடியாத பதிவை பதித்துச் சென்றுள்ளார்.
தோழர் மகேஸ்வரன் அக்காலத்திலும், பிற்காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தோழமையுடன் இணைந்து பயணித்தார்.
உலக வரலாற்றையும், மனித வரலாற்றையும் தனக்கேயுரிய நகைச்சுவை கலந்து பகிர்ந்து கொள்ளும் நடமாடும் விக்கிப்பீடியா மனிதராக வாழ்ந்த தோழர் மகேஸ்வரன் அவர்களை ஈழ வரலாறு என்றும் நினைவில் பதிந்திருக்கும்.
அமரர் தோழர் மகேஸ்வரன் அவர்களின் இறுதி கிரியை தொடர்பாக விரைவில் பதிவிடுவோம்.
000
Related posts:
|
|
|


