வீதி விபத்தில் பிரபல சட்டத்தரணி றெமீடியஸ் படுகாயம் – யாழ் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை!

பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினருமான முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் - துன்னாலையை சேர்ந்தவர் கைது!
சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்துமாற...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !
|
|