வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!
Wednesday, May 22nd, 2019
புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகளின் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியிருந்தார்கள்.
எனினும் அவர்கள் தற்சமயம் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பிரதமர் ஜப்பான் விஜயம்!
நடைமுறைக்கு வரும் அதிவிசேட திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி விசேட தீர்மானம்!
கட்டுமானத் திட்டங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பியுங்கள் - ஒப்பந்ததாரர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும...
|
|
|


