வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்: ஒருவர் காயம்!
Saturday, December 8th, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பத்தில் ஒருவரின் கையில் எரிகாயம் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் - சுற்றுலாதுறை அம...
|
|
|


