வீடுகளில் அன்டிஜன் பரிசோதனை நடத்த திட்டம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Friday, August 27th, 2021
வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கல்வி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி விசேட செயலணி!
தேசிய தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த யாழ். மாவட்ட செயலகம் - 14 பிரதேச செயலகங்களுக்கும் சிறப்ப விருத...
சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொலிசார் வலியுறுத...
|
|
|


