விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க திட்டம்!
Monday, February 5th, 2018
நாட்டில் நெல் தவிர்ந்த விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திக்கானஅமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் கொய்யா, மிளகாய், பாகற்காய், பப்பாசி, வெங்காயம், நிலக்கடலை, அன்னாசி, திராட்சை போன்ற பயிர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு உலகவங்கி உதவி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயற்திட்டமானது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மொனராகலை, மாத்தளை ஆகிய 7 மாவட்டங்களில்நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Related posts:
யாழ் - பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில், வியாட்நாம் பிரதி பிரதமருடன் கலந்துரையாடல்!
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|
|


