விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பீடு!
Friday, December 30th, 2016
அரசாங்கம் இதுவரை ஏழு இலட்சத்து 471 விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் 661 கோடி ரூபாவை உரமானியமாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித ஜயதிலக தெரிவித்துள்ளார்.
வினைத்திறனான முறையில் உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமநல சேவைகள் அலுவலகங்கள், வலய அமைப்புக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன.
நீர் பற்றாக்குறையினால், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான வயல் காணிகள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.சி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts:
தற்காலிக நிர்வாக சபையின் கீழ் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை!
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
நாட்டில் தேவையான அளவு சீனி கையிரப்பில் - சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக ஏற்றுமதி இறக்குமதி...
|
|
|


