விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Monday, July 3rd, 2017

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் இத்தாலி தலைநகர் ரோம் நகரில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் விவசாய அபிவிருத்திக்கு பொறுப்பான அதிகாரி ஹில்பட் எவ் ஒன்போவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த வேலைத்திட்டம் அரச, தனியார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு தேவையான நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 57 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து தமது உற்பத்தி மற்றும் வியாபார நடவடிக்கைகளை அதிககரித்து அதன்மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

சிறு விவசாய உற்பத்தி திட்டம், விவசாய உற்பத்திகளை விநியோகிகத்தல் மற்றும் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் ஆகிய பணிகளும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் சிறியளவில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: