விலைகள் அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னமும் நட்டத்தையே எதிர்கொள்கிறது – எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!
Friday, May 6th, 2022
கடந்த 18 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெற்றோல் நட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 313 ரூபாவாக இருந்தாலும், 87 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏப்ரல் 18 ஆம் திகதி விலை அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நாளாந்த நட்டம் 1613 மில்லியன் ரூபாவாகும் எனவும் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக - சுற்றுலா அமைச்சின் ச...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!
அரச ஊழியர்களின் சம்பளம் அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன ச...
|
|
|


