விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை அமைச்சர் ஆலோசனை!

விலங்கு தீவனம் மற்றும் பியர் தாயாரிப்புகளுக்கு அரிசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அந்த அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரசி பாவனை இடைநிறுத்தி அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என விவசாய அமைச்சர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
சில பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில், ஏற்படக்கூடிய உணவுத் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 3 வருடங்களில் வடக்கில் 2500 வீட்டுத்திட்டத்தினை வழங்குவதே இலக்கு - அமைச்சர் சஜித்
கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நிறைவு - களத்தில் 41 வேட்பாளர்கள் !
சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நாளை!
|
|