விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் – நிதியமைச்சர் ரவி!

நாட்டின் வறுமையை ஒழித்து, விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி அமைச்சுகளின் செயலாளர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் போது நிதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு அரச ஊழியர்களின் தொழில்திறன் மிகவும் முக்கியமாகும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அமைச்சுக்களின் செலவீனங்களை மீளாய்வு செய்வதற்காக நிதியமைச்சின் கீழ் மத்தியமயப்படுத்தப்பட்ட பிரிவொன்று நிறுவப்படவுள்ளதாக கூறினார்.
தேசிய திட்டமிடல் கொள்கைக்கு அமைய அமைச்சுக்களின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தரத்தை பேணுவது அவசியமாகும். அடுத்த வருடத்தில் அனர்த்த நிலைமைகளின் போது மாத்திரமே மேலதிக நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|