வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் – 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி நிறுவப்படும் அரசியலமைப்பு பேரவையில் பத்து உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அரசியலமைப்பு பேரவையி சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: