வித்தியா கொலை: விடுதலையாகி மீண்டும் கைதான நபருக்கு தொடர்ந்தும் மறியல்!

Wednesday, October 4th, 2017

மாணவி வித்தியா பாடுகொலை செய்யப்பட்ட வழக்கில் நிரபராதி என குறிப்பிட்டு விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட 1ஆவது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த காலப்பகுதியில் வழக்கின் முதலாவது சந்தேகநபரான இருந்தவர்  பூபாலசிங்கம் இந்திரகுமார்.

இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரை வெட்டுவேன்” என நீதிமன்ற வாளகத்தில் வைத்து பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை “வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என தீர்ப்பயத்தால் தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டமா அதிபரினால் தீர்பாயத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரத்தில், கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியாக உள்ளாரா? இல்லையா? என்பதனை இந்த மன்று கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை உள்ளது.அதனை அறிந்து கொண்டால் மாத்திரமே, குறித்த நபருக்கு எதிராக சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழா, அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழா வழக்கு நடத்த முடியும் எனும் தீர்மானத்திற்கு வர முடியும்.

ஆகவே மாணவி கொலை வழக்கின் அத்தாட்சி படுத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரத்தினை யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு பணிக்கிறேன்” என நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்

Related posts:

ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை - ஜனாதிபதி!
நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான பற் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை - சுகாதார அமைச்சு ஏற்பாடு!
துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...