விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறைமையில் சுகாதார ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்படலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் ஆரம்பமாகின- ஈ....
காலநிலை மாற்றம் - கடல் மட்ட உயர்வினால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டேயர் நிலப்பரப்பை இலங...
|
|