விண்ணப்பப்படிவங்களை பூர்த்திசெய்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு !
Sunday, June 23rd, 2019
வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய வகையில் பூர்த்தி செய்து அனுப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தினாலோ, மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்
Related posts:
இலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்!
மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரிக்கு அமைக்க இந்தியாவின் உதவி – அமைச்சர் இராதாகிருஷ்ணன்!
கடலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை - பருத்தித்துறையில் சம்பவம்!
|
|
|


