விடைத்தாள் திருத்தும் பணிக்கு 6000 ஆசிரியர்கள் பற்றாக்குறை – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!
Tuesday, March 14th, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார் 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் முக்கியமாக விஞ்ஞானப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வெளிநாட்டு சிறைகளில் 8189 இந்திய கைதிகள் – இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி!
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!
|
|
|


