விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீள் அறிவித்தல் வரை சேவைக்கு திரும்ப வேண்டாம் – இராணுவம் ஊடக பிரிவு அறிவிப்பு!

திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இராணுவம் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள சகல முன்பள்ளிகள், அரச பாடசாலைகள் மற்றும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலக இணையசேவை தரப்படுத்தலில் இலங்கை!
உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!
வடக்கு கிழக்கில் தரம் 1 இற்கான மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி – எச்சரிக்கிறார் தமிழர் ஆசிரியர் சங்கத...
|
|