விஞ்ஞான பீட ஆசிரியர்களின் நியமனத்தில் குறைபாடுகள்!
Monday, October 10th, 2016
விஞ்ஞான பீட ஆசிரியர்கள் 3500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதங்களில் குறைபாடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.
குறித்த ஆசிரியர்களுக்கு உரிய சம்பள அளவு அந்த நியமனக் கடிதங்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டும், விஞ்ஞான பீட ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் போது கல்வியமைச்சின் அதிகாரிகள் இவ்வாறு கவனக் குறைவாக இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள அளவை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.

Related posts:
யாழில் பால் புரைக்கேறியதால் இரண்டு மாத ஆண் குழந்தை பலி!
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் - சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப...
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஜேர்மனி பயணம் - ஜனாதிபதி ...
|
|
|


