வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்!

நாடு முழுவதும் காலை 10:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் இதுவரை கொழும்பில் 25% வாக்குப்பதிவும், மாத்தறையில் 22% வாக்குப்பதிவும் குருநாகலில் 25% வாக்குப்பதிவும் கண்டியில் 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் 20% வாக்குப்பதிவும் புத்தளத்தில் 16% விகித வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் 30%, ஹம்பாந்தோட்டை 24%, கிளிநொச்சி மற்றும் கேகாலையில் 25% வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மொனராகலை 35%, இரத்தினபுரி 24%, பதுளை 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
Related posts:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்ப...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது - தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான்...
எரிவாயுவின் விலை இன்றுமுதல் குறைக்கப்படும் - லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
|
|