வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும் – சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
Saturday, November 13th, 2021
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன வரி அல்லது இறக்குமதி தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் எவ்வித தளர்வுகளும் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சந்தையில் உள்ள வாகனங்களும் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
அந்நிய செலாவணி அதிகரிக்கும் வரை வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாதென்றே தோன்றுகின்றனர்.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


