வாகனப் பதிவுத்திணைக்களம் மீது மகிந்த அமரவீர குற்றச்சாட்டு!
Thursday, March 28th, 2019
நரஹேன் பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனப்பதிவுத்திணைக்களத்தில் சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்து கொள்ள முடியாத நிலையே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
நாரஹேன் பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனப்பதிவுத்திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அங்கு சென்று வரும் அனைவரும் அதிகாரிகளின் சேவை தொடர்பில் குறையே தெரிவிக்கின்றனர். சிறிய சேவையேனும் பணம் கொடுக்காமல் செய்து கொள்ள முடியாத நிலையே அங்கு இருக்கின்றது.
அத்துடன் மோட்டார் வாகன பதிவுத்திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த்தப்பான எண்ணம் இன்று நேற்று வந்ததல்ல. ஆரம்பகாலம் முதல் இருந்து வருகின்றது. என்றாலும் இந்தக்குற்றச்சாடடு அரசாங்கத்துக்கும் அமைச்சருக்கும் நல்லதில்லை. அதனால் இது தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


