வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை
Tuesday, October 31st, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(31) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பட்டானிசூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திர குளம் வரை, ஒமேகா லைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் நீதியரசர்!
40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல...
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகத...
|
|
|


