வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024

வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கான இலவச குடிநீர் இணைப்பிற்கு தலா 16000 ரூபா வீதம்  22 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக இப்பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட நிலையில் வாழும் 140 குடும்பங்களுக்கு இந்த திட்டத்தினூடாக நடமவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

அதனடிப்படையில் சரஸ்வதி சனசமூக நிலைய புனரமைப்பு வேலைக்கு 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,

அதேபோன்று சாள்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 6 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,

மேலும் அல் மதினா  விளையாட்டுக் கழகத்திற்கு 8 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அல் அக்சா முன்பள்ளிக்கு 2 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அத்துடன் வீட்டுத் திட்டம் தொடர்பாகவும், காணி உரித்து பெற்றுக் கொள்ளல் தொடர்பாகவும் குறித்த சந்திப்பின்போது அப்பகுதி மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: